தேர்தல் முறைகேடு வழக்கு: விசாரணைக்கு நேரில் ஆஜராகும் டிரம்ப்..!


தேர்தல் முறைகேடு வழக்கு: விசாரணைக்கு நேரில் ஆஜராகும் டிரம்ப்..!
x

கோப்புப்படம்

தேர்தல் முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு டிரம்ப் நேரில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அட்லாண்டா,

அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொன்ல்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஆட்சியில் இருந்தபோது டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ஜார்ஜியா மாகாணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.

இதில் தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 18 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்டா கோர்ட்டில் நடந்து வருகின்றன. நாளை(வியாழக்கிழமை) டிரம்ப் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகுமாறு ஜார்ஜியா கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் கோர்ட்டில் நேரில் ஆஜராக உள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார். "நீங்கள் நம்புகிறீர்களா? வியாழக்கிழமை அன்று ஜார்ஜியாவுக்கு கைது செய்யப்படுவதற்காக செல்ல உள்ளேன்" என அதில் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகள் உறுதியானால் 20 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதும் கேள்விக்குறியாகி விடும்.


Next Story