சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து, டிராக்டர் மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு, 6 பேர் கவலைக்கிடம்


சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து, டிராக்டர் மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு, 6 பேர் கவலைக்கிடம்
x

கோப்புப்படம் 

பள்ளி பேருந்து சுமேர்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பாலி,

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் பள்ளி பேருந்து ஒன்று டிராக்டர் மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் மாணவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக குஜராத் மாநிலம் மெஹ்சானாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர், ஜெய்சல்மருக்கு சுற்றுலா சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் பள்ளி பேருந்து சுமேர்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story