குஜராத்தில் இரண்டு முறை லேசான நிலநடுக்கம்


குஜராத்தில் இரண்டு முறை லேசான நிலநடுக்கம்
x

குஜராத்தில் உள்ள தலாலா நகரில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலா நகரத்தில் இன்று மதியம் 3.14 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதைத் தொடர்ந்து சில நிமிடங்களில், 3.18 மணிக்கு அதே பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் காரணமாக உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story