வேலையில் அலட்சியம்: பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவு


வேலையில் அலட்சியம்
x

பீட் மாவட்டத்தில் மணல்கொள்ளை நடப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.

மும்பை,

மராட்டியத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி இரண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மராட்டியத்தின் பீட் மாவட்டத்தில் மணல்கொள்ளை நடப்பதாக மாவட்ட கலெக்டருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்தபோது, மணல்கொள்ளை நடப்பது உறுதியானது.

இதனையடுத்து, மணல்கொள்ளையை கண்டுகொள்ளாமல், அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் வருவாய்த்துறை அதிகாரிகளான சுதாகர் அந்தலே மற்றும் கிரண் பிரபாகர் தந்தே ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து, பீட் மாவட்ட கலெக்டர் அவினாஷ் பதக் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story