மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்றி பெறுவார்- அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை


மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்றி பெறுவார்- அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை
x

மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்று பெறுவார் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மும்பை,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்புதான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்தநிலையில் உத்தவ் தாக்கரேயை நேற்று முன் தினம் இரவு மும்பையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ாிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், ராகவ் சாதா உள்ளிட்டவர்கள் சந்தித்தனர். பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீயில் இந்த சந்திப்பு நடந்தது.

சந்திப்புக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:- தேர்தல் கூட்டணிக்காக நாங்கள் சந்தித்தோமா என கேட்கிறார்கள். நாங்கள் அதற்காக சந்திக்கவில்லை. எப்போதும் ேதர்தலை பற்றி மட்டுமே யோசிக்க ஒரு கட்சி நாட்டில் உள்ளது. நாங்கள் அந்த கட்சி அல்ல. விவசாயிகள், வேலையில்லாத திண்டாட்டம் என பல பிரச்சினை நம் முன் உள்ளது.

தேர்தல் வரும் போது, நாங்கள் தேர்தல் பற்றி பேசுவோம். உத்தவ் தாக்கரேவின் கட்சி, பெயர், சின்னம் என எல்லாம் திருடப்பட்டு உள்ளது. நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உத்தவ் தாக்கரேவின் தந்தை ஒரு புலி. இவர் புலியின் மகன். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிகிடைக்கும் என நம்புகிறேன். மக்கள் ஆதரவு உள்ளதால் வரும் தேர்தல்களிலும் அவா் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story