பி.பி.சி. அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்


பி.பி.சி. அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்
x

பி.பி.சி. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

பி.பி.சி. சமீபத்தில் 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக அந்த ஆவணம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டி இருந்தது. இந்தநிலையில் மும்பை, டெல்லியில் உள்ள பி.பி.சி. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மும்பை பி.கே.சி. பகுதியில் உள்ள பி.பி.சி. அலுவலகத்தில் 4 பேர் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

பி.பி.சி. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், " ஊடக அலுவலகத்தில் சோதனை நடத்துவது ஜனநாயகத்தில் எந்த வரையறைக்குள் பொருந்தும்?. நீங்கள் (மத்தியஅரசு) என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் நாங்கள் அதற்கு எதிராக குரல் எழுப்ப கூடாது. அப்படி குரல் எழுப்பினால், அரசு உங்களை நசுக்கிவிடும். நாட்டில் கொடூரமான போக்கு தலை தூக்க முயற்சிக்கிறது. நாம் ஒன்று சேராவிட்டால், அது முழுநாட்டையும் விழுங்கிவிடும். " என்றார்.


Next Story