'புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்' - எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்
நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
இது குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி டெல்லியில் நேற்று கூறியதாவது:-
புறக்கணிப்பதும், பிரச்சினை இல்லாததை பிரச்சினை ஆக்குவதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
அவர்கள் (எதிர்க்கட்சிகள்) புறக்கணிப்பு முடிவை மறுபரிசீலனை செய்து, விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story