இஸ்ரேல் வெளியுறவு மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை


இஸ்ரேல் வெளியுறவு மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
x

இந்தியாவில் இருந்து எல்லா இடங்களுக்கும் வர்த்தகம் நிகழ்கிறது என்று எல்லி கோஹன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி எல்லி கோஹன், இன்று டெல்லிக்கு வருகை தந்துள்ளார்இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது மற்றும் இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகைகான முன்னெற்பாடுகள் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அந்த வகையில் இன்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் எல்லி கோஹன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா-இஸ்ரேல் இடையிலான வர்த்தகம் விரைவில் 20 பில்லியன் அமெரிக்கா டாலர்களை தாண்டும் என்று கூறினார்.

இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒன்றை ஒன்று முழுமை பெறச் செய்கின்றன என்று குறிப்பிட்ட அவர், கிழக்கில் இருக்கும் வடக்கின் வாசல் இந்தியா என்றும் இந்தியாவில் இருந்து எல்லா இடங்களுக்கும் வர்த்தகம் நிகழ்கிறது என்றும் குறிப்பிட்டார்.


Next Story