குஜராத்தின் காந்தி நகரில் இருந்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று வேட்பு மனு தாக்கல்


குஜராத்தின் காந்தி நகரில் இருந்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று வேட்பு மனு தாக்கல்
x

குஜராத்தின் காந்தி நகரில் இருந்து மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

புதுடெல்லி,

கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 10 பேர், நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர்.

இதனை தொடர்ந்து, காலியாகவுள்ள அந்த 10 ராஜ்யசபை இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது.

இதன்படி, கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தில் 10 ராஜ்யசபை இடங்களுக்கான தேர்தல் வருகிற ஜூலை 24-ந்தேதி நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இவர்களில் தெரிக் ஓ பிரையன் (மேற்கு வங்காளம்) மற்றும் எஸ். ஜெய்சங்கர் (குஜராத்) உள்ளிட்டோர் முக்கியம் வாய்ந்தவர்கள் ஆவர். கோவாவில் இருந்து வினய் தெண்டுல்கர் ஓய்வு பெறுகிறார்.

அவர்களில் மத்திய மந்திரியான சுப்ரமணியம் ஜெய்சங்கர் கிருஷ்ணசுவாமி வருகிற ஆகஸ்டு 18-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர் குஜராத்தின் காந்தி நகரில் இருந்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

காலியாகவுள்ள இந்த இடங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு வருகிற ஜூலை 13-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூலை 24-ந்தேதி நடத்தப்படும்.


Next Story