அயோத்தியில் சுற்றுலா பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து: 7 பேர் பலி


அயோத்தியில் சுற்றுலா பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து: 7 பேர் பலி
x

Representational Image (PTI)

தினத்தந்தி 29 May 2022 3:39 PM IST (Updated: 29 May 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

பேருந்து ஓட்டுநர் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அயோத்தி,

கர்நாடகாவில் இருந்து 16 பேரை ஏற்றிக் கொண்டு சுற்றுலா பேருந்து ஒன்று அயோத்திக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பஹ்ரைச்- லகிம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நனிஹா சந்தை பகுதி வழியாக சென்ற போது எதிர் திசையில் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

பேருந்து ஓட்டுநர் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.


Next Story