மே 26-ல் உத்தரப்பிரதேச மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் - முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்


மே 26-ல் உத்தரப்பிரதேச மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் - முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்
x

2022-23-ம் ஆண்டுக்கான உத்தரப் பிரதேச மாநில பட்ஜெட் வருகிற மே 26-ந்தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

2022-23-ம் ஆண்டுக்கான உத்தரப் பிரதேச மாநில பட்ஜெட் வருகிற மே 26-ந்தேதி தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று தெரிவித்தார்.

லக்னோவில் 18 வது உத்தரப்பிரதேச சட்டசபையின் முதல் கூட்டத் தொடருக்கு செல்வதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "உத்தரப்பிரதேசத்தின் 18-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கிறேன்.

2022-23-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் வருகிற மே 26-ந்தேதி தாக்கல் செய்யப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது" என்று கூறினார்.

கூட்டத்தொடர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக சட்டசபையில் மாநில அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story