துப்பாக்கி முனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வயலில் புல் அறுக்க சென்றபோது கொடூரம்


துப்பாக்கி முனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வயலில் புல் அறுக்க சென்றபோது கொடூரம்
x
தினத்தந்தி 1 Aug 2022 11:41 AM IST (Updated: 1 Aug 2022 11:42 AM IST)
t-max-icont-min-icon

கால்நடைக்கு வயலில் புல் அறுக்க சென்ற இடத்தில் பெண்ணுக்கு துப்பாக்கி முனையில் பாலியல் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் (வயது 30) நேற்று மாலை கால்நடைக்கு புல் அறுக்க வயலுக்கு சென்றுள்ளார். அப்பெண் தனது ஆண் நண்பரை சந்திக்க வயல் பகுதிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த அதேபகுதியை சேர்ந்த 7 பேர் வயலுக்கு செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் அப்பெண்ணை இடைமறித்துள்ளனர்.

பின்னர் தாங்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு மிரட்டி அப்பெண்ணின் ஆடைகளை கலைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த செயலை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதையடுத்து, அந்த கும்பலிடமிருந்து தப்பித்த அப்பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அனுஜ், குல்தீப், அங்கித், ரவி, ரிஸ்வான், சோட்டா, அப்துல் ஆகிய 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story