நீண்ட நாட்களாக தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்த 3 டாக்டர்கள் பணி நீக்கம்


நீண்ட நாட்களாக தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்த 3 டாக்டர்கள் பணி நீக்கம்
x

நீண்ட நாட்களாக தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்த 3 டாக்டர்களை சுகாதாரத்துறை பணிநீக்கம் செய்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் நீண்ட நாட்களாக தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்த 3 டாக்டர்களை சுகாதாரத்துறை பணி நீக்கம் செய்துள்ளது. அலிகாரைச் சேர்ந்த டாக்டர் பிரியான்ஷ் சர்மா நீண்ட காலமாக பணிக்கு வரவில்லை. அதிகாரிகள் பலமுறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதேபோல், கோண்டாவில் டாக்டர் முஸம்மில் ஹுசைன் மற்றும் டாக்டர் ப்ரீத்தி குப்தா இருவரும் அனுமதியின்றி தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்துள்ளனர். இதையடுத்து மூவரையும் சுகாதாரத்துறை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறும்போது, "பொது மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பு கிடைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டம். உத்தரபிரதேச அரசில் தங்கள் கடமைகளைச் செய்யாதவர்கள் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.

நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதில் எந்த சமரசமும் கிடையாது. அனைத்து டாக்டர்களும் நோயாளிகளுக்கு கடின உழைப்புடனும் நேர்மையுடனும் சேவை செய்ய வேண்டும். அரசுப் பணி விதிகளை மீறும் நபர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுக்கமின்மையை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று கூறினார்.


Next Story