உ.பி.: மனைவியின் கை, கால்களை கட்டி போட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை; உடல் அருகே 2 நாட்கள் படுத்து கிடந்த கணவர்


உ.பி.:  மனைவியின் கை, கால்களை கட்டி போட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை; உடல் அருகே 2 நாட்கள் படுத்து கிடந்த கணவர்
x
தினத்தந்தி 25 Dec 2022 2:36 PM IST (Updated: 25 Dec 2022 2:39 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் தூங்கிய மனைவியின் கை, கால்களை கட்டி போட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்து உடல் அருகே கணவர் 2 நாட்கள் படுத்து கிடந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.



லகீம்பூர்,


உத்தர பிரதேசத்தின் லகீம்பூர் மாவட்டத்தில் கோலா கோகரான் பகுதியை சேர்ந்தவர் முகமது வஷி. இவர், உஷா சர்மா என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பு, உஷா மதம் மாறி அக்சா பாத்திமா என பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

இந்நிலையில், முகமதுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், முகமது ஆத்திரத்தில் இருந்துள்ளார். பின்னர் இரவில் படுக்க சென்றுள்ளனர். அவரது மனைவி தூங்கிய பின்னர் எழுந்த முகமது, ஆத்திரம் தீராமல் மனைவியின் கை, கால்களை கட்டி போட்டுள்ளார்.

இதன்பின்பு, அவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார். அதன்பின்னர் அந்த அறையிலேயே குழி ஒன்றை தோண்டி அதில், உடலை போட்டு மூடியுள்ளார். யாரும் கண்டுபிடித்து விட கூடாது என்பதற்காக 2 நாட்கள் அந்த அறையிலேயே தூங்கி செலவிட்டு உள்ளார்.

இந்நிலையில், முகமதுவின் தாயார் வீட்டுக்கு வந்தபோது மருமகளை தேடியுள்ளார். அவரை காணவில்லை என்றதும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவம் பற்றி தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த செய்தியையும் படிங்க... குடிபோதையில் வாக்குவாதம்; கணவரை கொன்று, பக்கத்திலேயே படுத்து உறங்கி, காலையில் வேலைக்கு புறப்பட்ட மனைவி




Next Story