பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி'யின் பெயரை மாற்ற திட்டம்


பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெயரை மாற்ற திட்டம்
x

பெங்களூருவில் நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் பாட்னாவில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்பட பல எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன.

முதல் கூட்டம் பாட்னாவில் நிறைவடைந்த நிலையில் 2வது கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. நாளை காலை 11 மணிக்கு பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஜம்முகாஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சிகர சமத்துவ கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மாணி), மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) பெயரை மாற்றம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. தற்போது கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெயரை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் புதிய பெயர் நாளை பெங்களூரு கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story