உத்தரபிரதேசத்தில் பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் எதிரொலியாக உத்தரபிரதேசத்தில் பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரேலி,
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல், டெல்லி, வடகிழக்கு மாநிலங்கள், கேரளா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பண்ணையில் கடந்த வாரம் சில பன்றிகள் திடீரென இறந்தன. அவை ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் இறந்ததை இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்தது.
இந்நிலையில் பரேலி மாவட்டத்தின் பரீத்பூரில் உள்ள மற்றொரு பண்ணையில் மேலும் 20 பன்றிகள் பன்றிக்காய்ச்சலால் பலியாகின. அதைத் தொடர்ந்து, பரேலி மாவட்டத்தில் பன்றிச் சந்தைகளை மூடவும், பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story