உத்தரபிரதேசம்: பள்ளி மாணவனை வகுப்பறையில் வைத்து பூட்டிச் சென்றதால் பரபரப்பு


உத்தரபிரதேசம்: பள்ளி மாணவனை வகுப்பறையில் வைத்து பூட்டிச் சென்றதால் பரபரப்பு
x

பள்ளிக்கு அருகில் தேடிப் பார்த்தபோது வகுப்பறையில் இருந்து மாணவனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

லக்னோ,

உத்திர பிரதேச மாநிலம், கோரக்பூர் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில், கவனக்குறைவாக மாணவனை வகுப்பறையில் பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வகுப்பறையில் மாணவன் தூங்கியதை பார்க்காமல், பள்ளி அலுவலர்கள் அறையை பூட்டிச் சென்றுள்ளனர்.

இதனிடையே மாணவன் காணாமல் போனதாக பெற்றோர் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர். தொடர்ந்து பள்ளிக்கு அருகில் தேடிப் பார்த்தபோது வகுப்பறையில் இருந்து மாணவனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் பூட்டை உடைத்து மாணவனை மீட்டனர். கவனக்குறைவாக மாணவனை வகுப்பறையில் வைத்து பூட்டிச் சென்றது குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


1 More update

Next Story