உத்தரகாண்ட்: ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்தில் பிரதமர் மோடி வழிபாடு


உத்தரகாண்ட்: ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்தில் பிரதமர் மோடி வழிபாடு
x
தினத்தந்தி 21 Oct 2022 10:51 AM IST (Updated: 21 Oct 2022 10:52 AM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்தில் வழிபாடு செய்தார்.

கேதார்நாத்,

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெள்ளத்தில் ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடம் சேதமடைந்தது. பின்னர், மறுசீரமைக்கப்பட்ட நினைவிடத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி ரூ. 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில் இன்று காலை கேதார்நாத் கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு மறுசீரமைக்கப்பட்ட நினைவிடத்தை பார்வையிட்டு வழிபாடு செய்தார்.


Next Story