உத்தரகாண்ட் பேருந்து விபத்து : மீட்பு பணிகள் நிறைவு - உயிரிழப்பு 26 ஆக உயர்வு


உத்தரகாண்ட் பேருந்து விபத்து : மீட்பு பணிகள் நிறைவு - உயிரிழப்பு 26 ஆக உயர்வு
x

Image Courtesy : ANI 

பேருந்து விபத்தின் தேடுதல் மற்றும் மீட்பு பணி முடிவடைந்துள்ளது.

டேராடூன்,

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்டின் யமுனோத்ரி நோக்கி புனித யாத்ரீகர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று நேற்று மாலை புறப்பட்டு சென்றது. அந்த பேருந்தில் பஸ்ஸில் 28 யாத்ரீகர்கள் உட்பட மொத்தம் 30 பேர் இருந்தனர்.

பேருந்து யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 22 பேர் உயிரிழந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது இந்த விபத்தின் தேடுதல் மற்றும் மீட்பு பணி முடிவடைந்துள்ளது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உயர்நிலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என உத்தரகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story