திருப்பதியில் 10 நாட்களாக நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி தரிசனம் நிறைவு


திருப்பதியில் 10 நாட்களாக நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி தரிசனம் நிறைவு
x

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நேற்று இரவு நிறைவடைந்தது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2-ந் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நேற்று இரவு நிறைவடைந்தது. இதையடுத்து அர்ச்சகர்கள் சாஸ்திரப்படி வைகுண்ட வாசலை அடைத்தனர். வைகுண்ட ஏகாதசி நாட்களான 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ 300 ஆன்லைன் டிக்கெட்டில் 25 ஆயிரம் பேரும், இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

வைகுண்ட ஏகாதசி முதல் நாள் அன்று முன்னாள் முதல் மந்திரிகள், மந்திரிகள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதனால் அன்று ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வருவாய் கிடைத்தது.

இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களில் 2.50 லட்சம் பேர் தரிசனத்திற்கு வரவில்லை. இதனால் வைகுண்ட ஏகாதசி நாட்களில் தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி 10 நாட்களில் 6 லட்சத்து 9 ஆயிரத்து 219 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.39.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதியில் நேற்று 68,855 பேர் தரிசனம் செய்தனர். 21,280 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.61 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.


Next Story