வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி பேச்சு


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 24 Sep 2023 10:53 AM GMT (Updated: 24 Sep 2023 11:11 AM GMT)

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

நெல்லை-சென்னை வழித்தடம் உள்பட மொத்தம் 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் 9 புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது;

இன்று ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநில மக்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் வசதியைப் பெறுவார்கள்.

இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபலிக்கின்றன. 25 வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இப்போது மேலும் ஒன்பது ரெயில்கள் சேர்க்கப்படும். வந்தே பாரத் ரெயில்களின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றில் ஏற்கனவே 1,11 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். வந்தேபாரத் ரெயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கடந்த பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ள பல ரெயில் நிலையங்கள் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'ஆசாதி கா அம்ரித் கால்' உருவாக்கப்படும் அனைத்து நிலையங்களும் 'அம்ரித் பாரத் நிலையங்கள்' என்று அழைக்கப்படும். வேகம், உள்கட்டமைப்பு வளர்ச்சியின் அளவு 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது." இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Next Story