பிரதமர் மோடி எழுதிய 'கர்பா' பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்..!
நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய 'கர்பா' பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுடெல்லி,
நவராத்திரி பண்டிகை தொடங்கவுள்ள சூழலில் நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை எடுத்துக்கூறும் விதமாக பிரதமர் மோடி பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த பாடலை பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி பாடியிருக்கிறார். தனிஷ்க் பாச்சி இசையமைத்துள்ளார். இயக்குனர் நதீம் ஷா இந்த பாடலை இயக்கி இருக்கிறார்.
இந்த பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வெளியான உடனேயே பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர தொடங்கினர். இதனால், இந்த வீடியோவின் வியூஸ் சில மணி நேரங்களில் 20 லட்சத்தைத் தாண்டிவிட்டது.
இந்த வீடியோ பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,
"மங்களகரமான நவராத்திரி நெருங்கும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் நான் எழுதிய கர்பாவைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பண்டிகைக்கால பாடல் அனைவரையும் அரவணைக்கட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கர்பாவுக்கு குரல் கொடுத்து இசையமைத்ததற்காக மன்மீத் சிங் மற்றும் ஹர்மீத் சிங்கின் மீட் புரோஸ் இசைக்குழு மற்றும் திவ்யா குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.