ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ரெயில்வே போலீஸ் - வைரலாகும் வீடியோ


ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ரெயில்வே போலீஸ் - வைரலாகும் வீடியோ
x

ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பெண்ணின் உயிரை ரெயில்வே போலீஸ் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

ராய்பூர்,

ஓடும் ரெயிலில் ஏறவோ இறங்கவோ வேண்டாமென்று இந்திய ரெயில்வே தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் பயணிகள் பலர் இதை கேட்காமல் தொடர்ந்து ஓடும் ரெயிலில் ஏறவும் இறங்கவும் முயற்சி செய்து ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொள்வதும் அவர்களை ரெயில்வே போலீசார் காப்பாற்றுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயில் ஒன்றில் ஏற முயன்ற பெண் தடுமாறி ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். அப்போது அருகில் இருந்த ரெயில்வே போலீஸ் ஒருவர் விரைந்து ஓடி வந்து துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றினார்.

இந்த நிலையில் ரெயில்வே போலீஸ் அந்த பெண்ணை காப்பாற்றிய சிசிடிவி காட்சியை மத்திய ரெயில்வே துறை அமைச்சகம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், 'ரெயில்வே ஊழியரின் கவனமும், அவசரமும் பயணியின் உயிரைக் காப்பாற்றியது!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏறும் போது பெண் ஒருவர் திடீரென கீழே விழுந்தார். பணியில் இருந்த ஆர்பிஎப் வீரர் அவரது உயிரைக் காப்பாற்றினர். ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ செய்யாதீர்கள், அது உயிருக்கு ஆபத்தானது' என்று தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




Next Story