இன்ஸ்டாகிராமில் அதிக வருவாய் ஈட்டும் இந்தியர் விராட் கோலி... ஒரு பதிவிற்கு எத்தனை கோடி தெரியுமா...?


இன்ஸ்டாகிராமில் அதிக வருவாய் ஈட்டும் இந்தியர் விராட் கோலி... ஒரு பதிவிற்கு எத்தனை கோடி தெரியுமா...?
x

image courtesy; instagram/virat.kohli

தினத்தந்தி 11 Aug 2023 1:43 PM IST (Updated: 11 Aug 2023 1:45 PM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற சாதனையை கிரிக்கெட் வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.

புது டெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இவரது பேட்டிங் மற்றும் களத்தில் இவரின் ஆக்ரோஷமான செயல்பாடுகளால் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். கிரிக்கெட் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்படுகிறார். இவர் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அதிக நபர்கள் பின் தொடரும் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை 256 மில்லியன் நபர்கள் பின் தொடருகின்றனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிடப்படும் ஒரு பதிவின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள் குறித்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், முதல் இரண்டு இடங்களில் கால்பந்து நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்சி உள்ளனர். இந்தியர்கள் தரப்பில் விராட் கோலி 14-வது இடம் பிடித்துள்ளார். முதல் 20 இடங்களுக்குள் வந்த ஒரே இந்தியர் கோலி மட்டுமே. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இவர் பதிவிடும் ஒரு பதிவிற்கு இந்திய மதிப்பில் ரூ.11.45 கோடி வருமானம் ஈட்டுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிற நிறுவனங்களை விளம்பரபடுத்தும் பதிவிற்கு ரூ.14 கோடி பெறுகிறார். இதில் முதலிடத்தில் உள்ள ரொனால்டோ ஒரு பதிவிற்கு ரூ.26.75 கோடி வருமானம் பெறுகிறார். அதே வேளையில் மெஸ்சி ரூ.21.49 கோடி பெறுகிறார்.

இந்தியர் தரப்பில் கோலியை அடுத்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 29-வது இடத்தில் உள்ளார். அவர் ஒரு பதிவிற்கு ரூ.4.40 கோடி பெறுகிறார்.

1 More update

Next Story