பீகாரில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் கைது


பீகாரில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் கைது
x

தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரின் தலைக்கு ஜார்கண்ட் அரசு ரூ.1 கோடி பரிசாக அறிவித்து இருந்தது.

கயா,

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்டு தலைவர் பிரமோத் மிஸ்ரா. பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தார். தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவரது தலைக்கு ஜார்கண்ட் அரசு ரூ.1 கோடி பரிசாக அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் பிரமோத் மிஸ்ரா தனது கூட்டாளியுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாநில போலீசாருடன் சி.ஆர்.பி.எப். வீரர்கள், அதிரடிப்படை போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பிரமோத் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளியான அனில் யாதவ் ஆகிய இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


Next Story