"எங்களுக்கும் வேதனையாக உள்ளது..." கேரளாவில் போலீசையே கலங்கடித்த சம்பவம் - இணையத்தில் பரவும் பதிவு


x

கேரள மாநிலம், ஆலுவா பகுதியில் பீகார் தம்பதியின் 6 வயது மகள் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பொதுமக்களை போல் தாங்களும் துயரத்தில் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம், ஆலுவா பகுதியில் பீகார் தம்பதியின் 6 வயது மகள் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டிருந்தால், சிறுமியை மீட்டிருக்கலாம் என பலரும் விமர்சனம் செய்தனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கேரள காவல்துறையினர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், சம்பவத்தன்று புகார் அளிக்கப்பட்டதில் இருந்தே விரைந்து செயல்பட்டதாகவும், எனினும் சிறுமியை உயிரோடு மீட்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், போலீசாரும் பெற்றோர் தான் என தெரிவித்துள்ள அவர்கள், தாங்களும் வேதனையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.


Next Story