முதலில் நாம் இந்தியர்கள்... பிரிவினைவாத அணுகுமுறை ஆரோக்கியமற்றது - ஆந்திர முதல்-மந்திரியை விமர்சித்த பாடகர்


முதலில் நாம் இந்தியர்கள்... பிரிவினைவாத அணுகுமுறை ஆரோக்கியமற்றது - ஆந்திர முதல்-மந்திரியை விமர்சித்த பாடகர்
x

இங்கிலாந்தில் பிறந்த பாடகர் கடந்த 2016-ம் ஆண்டு இந்திய குடியுரிமைபெற்றார்.

டெல்லி,

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதில் ஒரிஜினல் பாடல் பிரிவில் விருது வென்றுள்ளது.

இதையடுத்து, ஆர்ஆர்ஆர் படக்குழுவிற்க்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆர்ஆர்ஆர் படக்குழுவிற்க்கு ஆந்திரபிரதேச முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், தெலுங்கு கொடி உயரப்பறக்கிறது. ஒட்டுமொத்த ஆந்திரபிரதேசத்தின் சார்பாக, எம்.எம். கீரவாணி, ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது வாழ்த்து செய்தியில் தெலுங்கு கொடி ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பதிவிட்ட நிலையில் அதை பிரபல பாடகர் ஆதன் சமி கான் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக பாடகர் ஆதன் சமி கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தெலுங்கு கொடியா? இந்திய கொடியை தானே நீங்கள் கூறிகிறீர்கள்?. முதலில் நாம் இந்தியர்கள் ஆகையால் நாட்டின் பிறபகுதியில் இருந்து உங்களை பிரிப்பதை நீங்கள் தயவு செய்து நிறுத்துங்கள்.. குறிப்பாக சர்வதேச அளவில்..., நாம் ஒரே நாடு.

இந்த பிரிவினைவாத அணுகுமுறை மிகவும் ஆரோக்கியமற்றது... இதை நாம் 1947-ல் பார்த்துள்ளோம்... நன்றி ஜெய்ஹிந்த்' என பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் பிறந்த பாடகர் ஆதன் சமி கான் கடந்த 2016-ம் ஆண்டு இந்திய குடியுரிமைபெற்றார். ஆதன் சமி கானின் தந்தை அர்ஷப் சமி கான் ஆவார். இவர் பாகிஸ்தான் விமானப்படை மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரியாக செயல்பட்டுள்ளார். ஆதன் சமி கானின் தாயார் நவ்ரின் சமி கான். இவர் இந்தியாவின் ஜம்முவை சேர்ந்தவர்.

இந்த தம்பதிக்கு 1971-ம் ஆண்டு பிறந்த மகன் ஆதன் சமி கான். இவர் தமிழ், கன்னடா, இந்தி, உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பாடல் பாடியுள்ளார்.

இங்கிலாந்தில் பிறந்த பாடகர் ஆதன் சமி கான் கடந்த 2016-ம் ஆண்டு இந்திய குடியுரிமைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story