சோனியா காந்தி விரைவில் குணமடைந்து பொது வாழ்க்கைக்கு திரும்ப பிரார்த்திக்கிறோம் - மம்தா பானர்ஜி டுவீட்


சோனியா காந்தி விரைவில் குணமடைந்து பொது வாழ்க்கைக்கு திரும்ப பிரார்த்திக்கிறோம் - மம்தா பானர்ஜி டுவீட்
x

சோனியா காந்தி விரைவில் குணமடைந்து பொது வாழ்க்கைக்கு திரும்ப பிரார்த்திப்பதாக மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2-ந் தேதி சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்த நிலையில், தற்போது புதுடெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமடைந்து பொது வாழ்க்கைக்கு திரும்ப பிரார்த்திப்பதாக மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று இப்போதுதான் தெரிய வந்தது. அவர் விரைவில் குணமடைந்து பொது வாழ்க்கைக்கு திரும்ப அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும், சோனியாஜி.' என்று கூறியுள்ளார்.



Next Story