எங்கள் ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் - ராகுல் காந்தி உறுதி


எங்கள் ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் - ராகுல் காந்தி உறுதி
x

எங்கள் ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் என்று நெசவாளர்களுக்கு ராகுல் காந்தி உறுதியளித்தார்.

மகபூப்நகர்,

கர்நாடகாவில் நடைபயணத்தை முடித்துக்கொண்டு தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் மகபூப்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "தெலுங்கானாவில் ஒரு விவசாயி எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அவனுடைய பண்ணை அவனுக்கு வருமானத்தைத் தர முடியாது. ஒருபுறம் விவசாயிகளுக்கு எதிராக கறுப்புச் சட்டங்களை இயற்றிய நரேந்திர மோடி, மறுபுறம் தெலுங்கானாவில் உங்கள் முதல்-மந்திரி ஏழைகளின் நிலத்தைப் பறிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு நான் நெசவாளர்களை சந்தித்தேன். நரேந்திர மோடி ஜிஎஸ்டி விதித்ததால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டிஆர்எஸ் அரசு நெசவாளர்களுக்கு உதவவில்லை. எங்கள் ஆட்சி வந்தவுடன் உங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் என்று தெலுங்கானா நெசவாளர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.


Next Story