காசாவின் நிலை இந்தியாவிற்கும் ஏற்படலாம் - பரூக் அப்துல்லா எச்சரிக்கை


காசாவின் நிலை இந்தியாவிற்கும் ஏற்படலாம் -  பரூக் அப்துல்லா எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Dec 2023 12:42 PM GMT (Updated: 26 Dec 2023 3:48 PM GMT)

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெற்றியடைய வாய்ப்புள்ளது.

ஜம்மு,

தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பியும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியாவால் தன் நண்பர்களை மாற்றிக் கொள்ள இயலும், ஆனால் அண்டை நாடுகளை மாற்றிக் கொள்ள இயலாது என முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்ப்பாய் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் கூட போர் என்பது தீர்வல்ல எனவும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் கூறியுள்ளார். இந்தியா தனது அண்டை நாடான பாகிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்தினால்தான், இரு நாடுகளும் வளர்ச்சியடைய முடியும்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெற்றியடைய வாய்ப்புள்ளது. அவர் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்புகிறார். இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காசா, பாலஸ்தீனத்தின் நிலையே இந்தியாவிற்கும் ஏற்படலாம் என்றார்.


Next Story