மேற்கு வங்காளம்; மம்தா பானர்ஜியிடம் அமலாக்க துறை விசாரிக்க பா.ஜ.க. வலியுறுத்தல்


மேற்கு வங்காளம்; மம்தா பானர்ஜியிடம் அமலாக்க துறை விசாரிக்க பா.ஜ.க. வலியுறுத்தல்
x

டெல்லி முதல்-மந்திரி கைது செய்யப்படலாம் என்றால், மேற்கு வங்காள முதல்-மந்திரியிடம் ஏன் விசாரணை நடத்தப்பட கூடாது என பா.ஜ.க. கேட்டுள்ளது.

கொல்கத்தா,

டெல்லி மதுபான ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய விசாரணையில் நவம்பர் 2-ந்தேதி நேரில் ஆஜராகும்படி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை முன்பே சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால், கெஜ்ரிவாலும் அடுத்து கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியினரிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது.

கெஜ்ரிவாலுக்கு சம்மன் என்ற செய்தி வெளியானதும், பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை ஆம் ஆத்மி தலைவர்கள் குறை கூறி வருகின்றனர். இந்த நிலையில், மேற்கு வங்காள பா.ஜ.க. பொது செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான அக்னிமித்ரா பால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, கெஜ்ரிவாலை நாளைக்கு விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள்.

டெல்லி முதல்-மந்திரி கைது செய்யப்படுவாரா? என்பது யாருக்கு தெரியும். அதனால், டெல்லி முதல்-மந்திரி கைது செய்யப்படலாம் என்றால், மேற்கு வங்காள முதல்-மந்திரியிடம் ஏன் விசாரணை நடத்தப்பட கூடாது என்று கேட்டுள்ளார்.

தொடர்ந்து அவர், ஜோதிபிரியா மல்லிக்கிற்கு முன்னால், மம்தா பானர்ஜியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரிடம் விசாரணை செய்ய விடாமல் அமலாக்க துறையை யார் தடுக்கிறார்கள்? அவரிடம் விசாரிக்க வேண்டும். ஏனெனில், அவருக்கு எல்லா விசயமும் தெரியும் என்று கூறியுள்ளார்.


Next Story