மேற்குவங்காளத்தில் அனைத்து மத நல்லிணக்க பேரணியை தொடங்கிய மம்தா பானர்ஜி


மேற்குவங்காளத்தில் அனைத்து மத நல்லிணக்க பேரணியை தொடங்கிய மம்தா பானர்ஜி
x

புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான காளிகாட் கோவிலில் பிரார்த்தனை செய்து மம்தா பானர்ஜி பேரணியை துவங்கினார்.

கொல்கத்தா,

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ந்தேதி மேற்குவங்காளத்தில் மத நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலை தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஹஸ்ரா மோர் பகுதியில் இருந்து மத நல்லிணக்க பேரணியை மம்தா பானர்ஜி தொடங்கினார்.

முதலாவதாக மேற்கு வங்காளத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான காளிகாட் கோவிலில் பிரார்த்தனை செய்து, பேரணியை அவர் துவங்கினார்.

இந்த பேரணியில் பல்வேறு மதங்களின் மத தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த பேரணியின்போது கோவில்கள், தேவாலயங்கள், குருத்துவாராக்கள் மற்றும் மசூதிகள் என பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சென்று மம்தா பானர்ஜி வழிபாடு நடத்தினார்.


Next Story