மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்


மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
x

கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து மம்தா பானர்ஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த வகையில் கடந்த வாரம் வடக்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து முடித்து விட்டு, கொல்கத்தா நகருக்கு திரும்பினார்.

அப்போது அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் தெளிவற்ற வானிலை காரணமாக சிலிகிரி அருகே உள்ள செவோக் விமான படை தளத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்த அவசர தரையிறக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக மம்தா பானர்ஜிக்கு முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு முதுகு மற்றும் மூட்டு பகுதியில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன பின்னர் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மம்தா பானர்ஜி, இன்று சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியோடு வெளியே வந்த மம்தா பானர்ஜி, பின்னர் காரில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார்.


Next Story