மேற்கு வங்காளத்தில் பரபரப்பு: பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தவர் கைது


மேற்கு வங்காளத்தில் பரபரப்பு: பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தவர் கைது
x

மேற்கு வங்காளத்தில் பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தவர் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளம் அருகே மால்டா மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்குள் மர்மநபர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தார். 8-ம் வகுப்பு நடக்கும் அறைக்குள் புகுந்த அவர் அங்கிருந்த ஆசிரியர், மாணவர்களை கொன்று விடுவதாக மிரட்டினார். இதனால் அவர்கள் செய்வதறியாது அச்சத்தில் அலறினர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மர்மநபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அவரிடம் இருந்து துப்பாக்கியுடன் 2 பாட்டில் திராவகமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

பள்ளி வகுப்பறைக்குள் ஒருவர் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பாகி வருகிறது.


Next Story