'நீட்' தேர்வு விவகாரத்தில் கர்நாடகத்தில் நிலைப்பாடு என்ன?; முதல்-மந்திரி சித்தராமையா பதில்


நீட் தேர்வு விவகாரத்தில் கர்நாடகத்தில் நிலைப்பாடு என்ன?; முதல்-மந்திரி சித்தராமையா பதில்
x

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் கர்நாடகத்தில் நிலைப்பாடு என்ன? என்பதற்கு முதல்-மந்திரி சித்தராமையா பதில் அளித்துள்ளார்.

விஜயாப்புரா:

விஜயாப்புரா மாவட்டம் அலவட்டி அணைக்கு பாகினா பூஜை செய்வதற்காக நேற்று முதல்-மந்திரி சித்தராமையா வந்தார். பல்லாரி விமான நிலையத்தில் வைத்து தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. அதுபோல், கர்நாடகமும் நீட் விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நீட் தேர்வை கர்நாடகம் ஏற்றுக் கொண்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதனை சரி செய்ய வேண்டும். அதற்கான தேவை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story