கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான தகவல்


கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான தகவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 18 May 2024 9:09 PM GMT (Updated: 19 May 2024 12:43 AM GMT)

பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும், ஆண்டு இறுதித்தேர்வுகளும் நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படுவது வழக்கம்.

சில நேரங்களில், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்படும்போது, பள்ளிகள் திறப்பு தள்ளிபோகும். நடப்பாண்டு, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந்தேதி வெளியாக இருப்பதாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளதாலும் பள்ளிகள் திறப்பு ஜூன் 2-வது வாரம் வரையில் தள்ளிபோக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும், தற்போது கோடை மழை கொட்டித் தீர்க்கிறது.

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் வருகிற 27-ந்தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளும் மாணவர்களை வரவேற்க தயாராகி வருகின்றன. முன்னதாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஜூன் 2-வது வாரத்தில் அப்போதையே சூழலுக்கு ஏற்றார்போல் பள்ளிகளை திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. தற்போது, கோடை மழை பெய்கிறது. இதன்காரணமாக, தேர்தல் முடிவுகள் வெளியான உடன், அடுத்த ஓரிரு நாட்களில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.' என்றனர்.


Next Story