"யாருக்கெல்லாம் மாரடைப்பு - மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்..!


யாருக்கெல்லாம் மாரடைப்பு - மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்..!
x

இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் 28.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

சமீப காலமாக இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இளம் வயதினரையும் இது விட்டுவைக்கவில்லை. நிகழ்ச்சிகளில் நடனமாடிக்கொண்டிருந்தவர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்திகளை அடிக்கடி பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் 28.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மேலும், இதில் 30-60 வயது நபர்களின் இறப்பு 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 15 வருடங்களில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

புகையிலை பயன்பாடு காரணமாக 32.8 சதவீதம் பேருக்கும், மதுபான பயன்பாட்டின் காரணமாக 15.9 சதவீதம் பேருக்கும், போதிய உடற்பயிற்சியின்மை காரணமாக 41 சதவீதம் பேருக்கும், பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளாமை காரணமாக 98.4 சதவீதம் பேரும் மாரடைப்பால் மரணமடைவதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை - இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் எழுத்து பூர்வ பதில் அளித்துள்ளார்.


Next Story