'மத உணர்வுகளை இந்தியா கூட்டணி புண்படுத்தி வருகிறது' - பிரதமர் மோடி


மத உணர்வுகளை இந்தியா கூட்டணி புண்படுத்தி வருகிறது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 3 Jan 2024 1:35 PM GMT (Updated: 3 Jan 2024 2:40 PM GMT)

ஜி-20 மாநாட்டால் லட்சத்தீவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற பா.ஜ.க. மாநில பெண்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"கேரளாவில் காங்கிரஸ், இடது முன்னணியினர் மாறி மாறி ஆட்சி செய்து வஞ்சனையை விதைத்து வருகின்றனர். பெண்களின் சக்தியை புறக்கணித்து வருகின்றனர். குடும்ப அரசியலுக்கு முக்கியதுவம் கொடுத்து, மக்களை கண்டுகொள்ளவில்லை.

கேரளாவில் நல்ல ஆட்சி தர வேண்டுமென்றால், அது பா.ஜ.க. அரசால் மட்டுமே முடியும். பெண்களின் நலனுக்கான மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பா.ஜ.க. அரசால் மட்டுமே நிறைவேற்ற முடியும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகளை நம் பார்த்து வருகிறோம். இதை எல்லாம் சரிசெய்ய முடியாத கையாளாகாத அரசு தான், கேரளாவில் நடந்துவருகிறது. இந்தியா கூட்டணி மத உணர்வுகளை புண்படுத்தி வருகிறது. கோவில்களை வருமானம் தரும் இடங்களாக மட்டுமே பார்க்கிறது.


ஜி-20 மாநாட்டால் லட்சத்தீவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச சுற்றுலா வரைப்படத்தில் லட்சத்தீவை இடம்பெறச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story