குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு; கர்நாடக அரசு மீது எடியூரப்பா குற்றச்சாட்டு

குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு; கர்நாடக அரசு மீது எடியூரப்பா குற்றச்சாட்டு
x

குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதாக கர்நாடக அரசு மீது முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு:

குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதாக கர்நாடக அரசு மீது முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

நிவாரண பணிகள்

கர்நாடக காங்கிரஸ் அரசின் தோல்விகளை கண்டித்து பா.ஜனதா தலைவர்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கியுளளனர். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கோலார் மாவட்டம் முல்பாகிலில் உள்ள குருடுமலை கணபதி கோவிலில் பூஜை செய்து தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற பா.ஜனதாவின் பொதுக்கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது கடும் வெள்ளம் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டேன். இடிந்த வீடுகளுக்கு நிவாரணமாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது முதல்-மந்திரி சித்தராமையா ஆட்சியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் மந்திரிகள் யாரும் வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளவில்லை.

சித்தராமையா அரசியல் செய்கிறார்

வறட்சி விஷயத்தில் சித்தராமையா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அரசியல் செய்கிறார். போதிய மழை பெய்யாதபோது இந்த அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் வறட்சி, குடிநீருக்கே தட்டுப்பாடு, கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) உள்ளிட்ட அணைகள் காலியாகி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப்பட்டது மக்கள் நலனை காங்கிரஸ் அரசு முழுமையாக மறந்துவிட்டது தெளிவாக தெரிகிறது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story