ஹாசனில், கனமழைக்கு: 350 வீடுகள் சேதம்


ஹாசனில், கனமழைக்கு:  350 வீடுகள் சேதம்
x

ஹாசனில் கன மழைக்கு 350 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

ஹாசன்:

ஹாசன் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கலெக்டர் கிரிஷ் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தபோது கூறியதாவது:- ஹாசன் மாவட்டத்தில் சராசரியாக 25 முதல் 30 மி.மீ மழை பதிவாகி வருகிறது. ஆனால் சக்லேஷ்புராவில் நேற்று ஒரே நாளில் 150 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. இதனால் கடந்த 4 நாட்களில் 350-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

450 கட்டிடங்களில் சுற்று சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும் 50 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் கனமழைக்கு ரூ.49 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story