ரூ.20 கோடி போதைப்பொருள் கடத்தி வந்த 2 வெளிநாட்டு பெண்கள் கைது - ஓட்டலில் பதுங்கி இருந்தபோது சிக்கினர்

ரூ.20 கோடி போதைப்பொருள் கடத்தி வந்த 2 வெளிநாட்டு பெண்கள் கைது - ஓட்டலில் பதுங்கி இருந்தபோது சிக்கினர்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:47 PM GMT)

மும்பையில் ரூ.20 கோடி போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஓட்டலில் பதுங்கி இருந்தபோது அவர்கள் சிக்கினர்.

மும்பை,

மும்பையில் ரூ.20 கோடி போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஓட்டலில் பதுங்கி இருந்தபோது அவர்கள் சிக்கினர்.

போதைப்பொருள் கடத்தல்

பிரேசில் நாட்டில் இருந்து மும்பை வந்த விமானத்தில் 2 பெண்கள் போதைப்பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு விரைந்தனர். எனினும் அதிகாரிகள் செல்வதற்குள் அந்த பெண்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர். அதிகாரிகள் அந்த பெண்களை தேடினர். இதில் அவர்கள் கேத்வாடி பகுதியில் உள்ள ஓட்டலில் இருப்பது தெரியவந்தது.

வெளிநாட்டு பெண்கள் கைது

உடனடியாக ஓட்டலுக்கு விரைந்த அதிகாரிகள் பெண்கள் தங்கியிருந்த அறையில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்து ரூ.20 கோடி மதிப்பிலான 5 கிலோ கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருளை கடத்தி வந்ததாக அந்த பெண்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் தென் அமெரிக்க நாடான பொலிவியாவை சேர்ந்த எவிலினா அஷோகி (46), இலோர்கா குளோரி (36) என்பது தெரியவந்தது. அவர்கள் பற்பசை, அழகுசாதன பொருட்கள், சோப், மேக்அப் சாதனங்களில் மறைத்து வைத்து போதைப்பொருளை கடத்தி வந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story