மருந்து கடைக்காரர் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாதம் கூடுதல் அவகாசம்- சிறப்பு கோர்ட்டு அனுமதி

மருந்து கடைக்காரர் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாதம் கூடுதல் அவகாசம்- சிறப்பு கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 21 Sep 2022 4:30 AM GMT (Updated: 21 Sep 2022 4:30 AM GMT)

மருந்து கடைக்காரர் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

மும்பை,

மருந்து கடைக்காரர் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

10 பேர் கைது

முன்னாள் பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சமூகவலைதளத்தில் முகமது நபிக்கு எதிராக கருத்து ஒன்று தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்த அமராவதியை சேர்ந்த மருந்து கடை உரிமையாளர் உமேஷ் கோல்கே என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வழக்கு பதிவு செய்து கொலையில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து இருந்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு எதிராக சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கூடுதல் அவகாசம்

இந்தநிலையில் கோர்ட்டில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், 20 சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யவும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக கூறி சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடிய வக்கீல் எதிர்த்தார். இருப்பினும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.கே.லகோடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய என்.ஐ.ஏ. போலீசாருக்கு கூடுதலாக 90 நாட்கள் (3 மாதம்) அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

Next Story