15 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம்; 5 பேர் மீது வழக்கு


15 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம்; 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

15 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்டுள்ளனர்

தானே,

தானே சகாப்பூர் தாலுகா அகாய் கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தபோது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஒருவர் அழைத்து வந்தார். இதன் பின்னர் மறைவான இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்ற போது அங்கு மேலும் 4 பேர் வந்தனர். அங்கு வைத்து சிறுமியை 5 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். இது பற்றி யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்து போன சிறுமி சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் சென்று சாகாப்பூர் தாலுகா போலீசில் பலாத்காரம் பற்றி புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.


Next Story