அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ; கரும்புகையில் சிக்கிய 27 பேர் மீட்பு


அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ; கரும்புகையில் சிக்கிய 27 பேர் மீட்பு
x
தினத்தந்தி 1 Oct 2023 1:00 AM IST (Updated: 1 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கிர்காவ் சிக்காநகர் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகையில் சிக்கிய 27 பேர் பத்திரனாக மீட்கப்பட்டனர்

மும்பை,

மும்பை கிர்காவ் சிக்காநகர் தேஷ்முக் லைன் பகுதியில் கணேஷ் கிருபா என்ற 14 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் 3-வது மாடியில் நேற்று பிற்பகல் 2.25 மணி அளவில் அங்கிருந்த மின்வயரில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்து வீடுகளில் இருந்த குடியிருப்பு வாசிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. சிலர் மொட்டை மாடிக்கு ஓடிச்சென்றனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று வீடுகள் மற்றும் மொட்டை மாடியில் சிக்கி இருந்த 27 பேரை ராட்சத ஏணி மூலம் பத்திரமாக மீ்ட்டனர். இதில் 17 பேர் பெண்கள், 5 ஆண்கள் மற்றும் 5 குழந்தைகள் ஆவர். இதற்கிடையே மின்வயரில் பற்றிய தீயை வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story