14-வது மாடியில் இருந்து தள்ளுவண்டி தவறி விழுந்ததில் கட்டுமான தொழிலாளி பலி


14-வது மாடியில் இருந்து தள்ளுவண்டி தவறி விழுந்ததில் கட்டுமான தொழிலாளி பலி
x
தினத்தந்தி 25 Sept 2022 3:30 AM IST (Updated: 25 Sept 2022 3:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பை போரிவிலி மேற்கு பகுதியில் 14-வது மாடியில் இருந்து தள்ளுவண்டி தவறி விழுந்ததில் கட்டுமான தொழிலாளி பலி

மும்பை,

மும்பை போரிவிலி மேற்கு பகுதியில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு கட்டுமான தொழிலாளியாக ஒடிசாவை சேர்ந்த அபிமன்யு (வயது30) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் கட்டிடத்தின் கீழே தனது உறவினருடன் இரும்பு கம்பியை வெட்டும் வேலையை செய்தார். அப்போது கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து கட்டுமான பொருட்களுடன் தள்ளுவண்டியை 15-வது மாடிக்கு லிப்ட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 14-வது மாடிக்கு சென்ற போது லிப்டில் இருந்த தள்ளுவண்டி நகர்ந்து மேலே இருந்து கீழே நின்ற அபிமன்யு தலையில் விழுந்தது.

இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கட்டிடத்தின் மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது பணியில் அலட்சியமாக இருந்ததாக வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story