மோசடி வழக்கில் இருந்து அருண் காவ்லி மனைவியை விடுவிக்க கோர்ட்டு மறுப்பு


மோசடி வழக்கில் இருந்து அருண் காவ்லி மனைவியை விடுவிக்க கோர்ட்டு மறுப்பு
x

மோசடி வழக்கில் இருந்து அருண் காவ்லி மனைவியை விடுவிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

மும்பை,

மோசடி வழக்கில் இருந்து அருண் காவ்லி மனைவியை விடுவிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

ஊழியர்கள் பணம் மோசடி

மும்பையில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 1981-ம் ஆண்டு மூடப்பட்டது. இதையடுத்து அதில் வேலை பார்த்த ஊழியா்கள் இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை தாதா அருண் காவ்லி தலைமையிலான அகில் பாரதிய காம்கர் சேனா தொழிலாளர் சங்கம் நடத்தியது.

இந்த வழக்கை அடுத்து தனியார் நிறுவனம் அதில் வேலை பார்த்த 469 ஊழியர்களுக்கு ரூ.4 கோடி வழங்கியது. ஆனால் இந்த பணத்தில் ரூ.1.77 கோடியை சங்க தலைவர் அருண் காவ்லி, துணை தலைவரும் அருண் காவ்லியின் மனைவியுமான ஆஷா காவ்லி, பொருளாளர் சுனில் காலேகர் உள்ளிட்டவர்கள் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

விடுவிக்க மறுப்பு

இதுதொடர்பாக ஆஷா காவ்லி உள்ளிட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்தநிலையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஆஷா காவ்லி மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு வழக்கில் இருந்து ஆஷா காவ்லியை விடுவிக்க மறுத்துவிட்டது.


Next Story