மும்பையில் புதிய ஜெயில் கட்டப்படும் என துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் தகவல்


மும்பையில் புதிய ஜெயில் கட்டப்படும் என துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் தகவல்
x
தினத்தந்தி 27 Sep 2022 9:45 PM GMT (Updated: 27 Sep 2022 9:45 PM GMT)

மும்பையில் புதிய ஜெயில் கட்டப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

மும்பையில் புதிய ஜெயில் கட்டப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பையில் புதிய ஜெயில்

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு ஜெயிலில் 800 முதல் 850 விசாரணை கைதிகளை அடைக்க முடியும். ஆனால் தற்போது அதில் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் துணை முதல்-மந்திரியும் உள்துறை மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் உள்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில் கூட்டத்துக்கு பிறகு மும்பையில் புதிய ஜெயில் கட்டப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு ஜெயிலில் கைதிகள் நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே இங்கு வேறு ஜெயில் கட்ட உள்ளோம்.

ஜாமீனில் வர உதவி

இதேபோல மாநிலத்தில் 1,641 கைதிகள் ஜாமீனில் வெளியே வர தகுதி இருந்தும் பணம், உதவி செய்ய ஆள் இல்லாததால் ஜெயிலில் தொடர்ந்து உள்ளனர். அவர்களை ஜாமீனில் வெளியே கொண்டுவர தொண்டு நிறுவனங்களிடம் உதவி கேட்க உள்ளோம்" என்றார்.

இதற்கிடையே மும்பையில் புதிய ஜெயில் கட்ட இடத்தை கண்டறிய உள்துறை அதிகாரிகளுக்கு தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story