மாநிலங்களவை தேர்தலில் ஓட்டுப்போட மந்திரியை சிறையில் இருந்து விடுக்க ஐகோர்ட்டு மறுப்பு


மாநிலங்களவை தேர்தலில் ஓட்டுப்போட மந்திரியை சிறையில் இருந்து விடுக்க ஐகோர்ட்டு மறுப்பு
x

மாநிலங்களவை தேர்தலில் ஓட்டுப்போட மந்திரி நவாப் மாலிக்கை சிறையில் இருந்து விடுவிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் மராட்டியத்தில் இருந்து 6 பேரை தேர்ந்தெடுக்க 7 பேர் போட்டியிட்டதால் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி சிறையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.க்களான மந்திரி நவாப் மாலிக், முன்னாள் மந்திரி அனில்தேஷ்முக் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக ஒருநாள் ஜாமீன் கேட்டு மும்பை சிறப்பு கோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சிறை கைதிகளுக்கு ஓட்டுப்போட உரிமை கிடையாது என அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு நேற்று மறுப்பு தெரிவித்து விட்டது.

சிறப்பு கோர்ட்டின் இந்த தீ்ர்ப்பை எதிர்த்து மந்திரி நவாப் மாலிக், முன்னாள் மந்திரி அனில்தேஷ்முக் ஆகியோர் மும்பை ஐகோர்ட்டில் மனு செய்தனர். இதில் அனில்தேஷ்முக் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவில்லை.

மந்திரி நவாப் மாலிக் மனு நீதிபதி பி.டி. நாயக் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நவாப் மாலிக் வக்கீல் வாதிடுகையில், " எனது மனுதாரர் ஜாமீன் கேட்டு கோர்ட்டை வற்புறுத்தவில்லை. அரசியலமைப்பு உரிமையான வாக்குரிமையை செலுத்த சிறையில் இருந்து வாக்கு மையத்துக்கு போலீ்ஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றால் போதும். அதற்காவது அனுமதிக்க வேண்டும் " என்றார். ஆனால் மனுவில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி மந்திரியை சிறையில் இருந்து விடுவிக்க நீதிபதி மறுத்து விட்டார். இதையடுத்து மந்திரி நவாப் மாலிக் ஐகோர்ட்டின் மற்றொரு பெஞ்சில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உடனடியாக விசாரிக்க நீதிபதி பாரதி தாங்ரே மறுத்து விட்டார்.

இதனால் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் மந்திரியான நவாப் மாலிக், முன்னாள் மந்திரியான அனில் தேஷ்முக் ஆகிய 2 பேருமே வாக்களிக்க முடியாமல் போய் விட்டது.

1 More update

Next Story