மராட்டியம்; ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் . 2 சிறார்கள் உட்பட 4 பேர் பலி


மராட்டியம்; ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் . 2 சிறார்கள் உட்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 30 Aug 2023 1:35 PM IST (Updated: 30 Aug 2023 4:08 PM IST)
t-max-icont-min-icon

ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் . 2 சிறார்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.

புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தின் பூர்ணா நகர் பகுதியில் இந்த தீ விபத்து நடந்துள்ளது. அங்கு உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் தரை தளத்தில் மின்சார ஹார்டுவேர் பொருட்கள் கடை செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 5 மணியளவில் அந்த கடையில் தீ விபத்து எற்பட்டுள்ளது. தீ மளமளவென கொழுந்து வீட்டு எரிய தொடங்கியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். எனினும் இந்த தீ விபத்தில் . 2 சிறார்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தினால் கடை முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story