பால்கர் மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து பெண் தலைவர் கைது


பால்கர் மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து பெண் தலைவர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2023 7:30 PM GMT (Updated: 13 Oct 2023 7:30 PM GMT)

பால்கர் மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து பெண் தலைவரை போலீசார் கைது செய்தனர்

வசாய்,

பால்கர் மாவட்டத்தில் உள்ள பாம் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்து வருபவர் தர்சனா பிம்ளே. சம்பவத்தன்று பாதுகாப்பு ஏஜென்சி நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர் தடையில்லா சான்றிதழ் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்கு பஞ்சாயத்து பெண் தலைவர் தர்சனா விண்ணப்பதாரரிடம் ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். அப்போது பணம் தருவதாக கூறிய அவர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் யோசனைப்படி ஏஜென்சி உரிமையாளரிடம் லஞ்ச பணத்தை கொடுத்து அனுப்பினர். இந்த பணத்தை புகார்தாரர் பஞ்சாயத்து பெண் தலைவர் தர்சனாவை சந்தித்து கொடுக்க முயன்றார். அங்கிருந்த குமாஸ்தா பாவேஷ் பிம்ளே லஞ்ச பணத்தை பெற்ற போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்ச வழக்கில் தொடர்புடைய பஞ்சாயத்து பெண் தலைவர் தர்சனாவையும் கைது செய்தனர். இவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story